கொஸ்கம, சாலாவ பிரதேசத்தில் வீடொன்றின் தோட்டத்தில் இருந்த மோட்டார் குண்டு ஒன்றின் பகுதி ஒன்று வெடித்ததில் 15 வயது சிறுவன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளானதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் தனது சகோதரியுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதே குறித்த மோட்டார் குண்டு வெடித்துள்ளது.

இதையடுத்து குறித்த சிறுவன் அவிசாவளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையத்து குறித்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து சாலாவ இராணுவ முகாமின் இராணுவ வீரர்கள் குறித்த  மோட்டார் குண்டை அகற்றியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவனின் வீட்டுத் தோட்டத்தில் இந்த மோட்டார் குண்டு அலங்காரப் பொருளாக வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் ஒரு பகுதி மீண்டும் வெடித்துச் சிதறியதில் குறித்த சிறுவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.