ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை மறுப்பு

By Vishnu

28 Jan, 2022 | 04:27 PM
image

20 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.

சட்டமா அதிபர் ஆட்சேபிக்காதபோதிலும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு பிணை வழங்குவது தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல என்பதால் பிணை உத்தரவை நிராகரித்த நீதிபதி, 2022 பெப்ரவரி 9 மேன்முறையீட்டு நீதிமன்றிடம் பிணை கோருமாறு ஹிஜாஸ் தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சிறுபான்மையின உரிமைகள் தொடர்பான சட்டத்தரணியும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலரது சார்பில் ஆஜராகியவருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் பயங்கரவாதத்தடைச சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார். 

அவர் கைதுசெய்யப்பட்ட தருணத்தில் அதற்கான காரணம் குறித்து அவருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ தெளிவுபடுத்தப்படவில்லை. இருப்பினும் அவ்வாறு கைதுசெய்யப்பட்டதிலிருந்து அவர் தொடர்ச்சியாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார். 

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு உதவியமை மற்றும் இன, மத சமூகங்களுக்கு இடையில் அமைதியின்மையையும் குழப்பத்தையும் தோற்றுவிக்கக்கூடியவாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இன, மத சமூகங்களுக்கு இடையில் அமைதியின்மையைத் தோற்றுவித்ததாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராகப் பயங்கரவாதத்தடை சட்டத்தின்கீழ் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் கடன் விவகாரம் இந்தியா சீனாவிற்கு...

2022-09-30 11:36:16
news-image

பிரஜைகளுக்காக உழைத்த ஒரு சட்டம் :...

2022-09-30 12:26:46
news-image

நகை கொள்ளை : ஒரே குடும்பத்தைச்...

2022-09-30 12:23:07
news-image

ஐநாவுடன் ஒத்துழைத்தமைக்காக இலங்கை உட்பட 42...

2022-09-30 11:11:16
news-image

நானுஓயா நகர் குப்பை மேட்டிற்கு என்னவாகப்போகிறது...

2022-09-30 10:53:40
news-image

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழில் துவிச்சக்கர...

2022-09-30 12:07:36
news-image

நெருக்கடியான தருணத்தில் இந்தியா மாத்திரம் இலங்கைக்கு...

2022-09-30 10:44:59
news-image

கொலை, கொள்ளையில் ஈடுபட்ட நபர் பொலிஸாரின்...

2022-09-30 10:26:22
news-image

டொலர் இன்மையினால் கரையோர புகையிரதத்தில் வேகத்தை...

2022-09-30 12:37:04
news-image

உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து ஐநாவின்...

2022-09-30 12:46:02
news-image

ஆயுதங்களுடன் இருவர் கைது

2022-09-30 10:11:13
news-image

புனர்வாழ்வு பணியக சட்ட மூலத்தை சவாலுக்குட்படுத்தி...

2022-09-30 10:47:34