( எம்.நியூட்டன்)
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கு இம்முறை இந்தியர்களுக்கு அனுமதி இல்லை எனவும் மட்டுப்படுத்தப்பட்ட இலங்கையர்களை அனுமதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கச்சதீவு தூய அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை வசந்தன் அடிகளார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா போரிடர் நிலைமை காரணமாக இந்திய பக்தர்களுக்கு இம்முறையும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த 500 பேர் மட்டுமே கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருவிழாவில் பங்கேற்கும் அனைவரும் பூஸ்டர் டோஸையும் பெற்றிருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவு திருவிழா தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM