நாட்டில் இனங்காணப்படும் தொற்றாளர்களில் 95 சதவீதமானோருக்கு ஒமிக்ரோன்

Published By: Digital Desk 3

28 Jan, 2022 | 04:58 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் 95 சதவீதமானோர் ஒமிக்ரோன் தொற்றாளர்களாகக் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாகவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ இதனைத் தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன,

நாட்டில் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. நாளாந்தம் 900 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஜனவரி 17 ஆம் திகதிக்கு பின்னரான இரு வாரங்களுக்குள் இவ்வாறு தொற்றாளர் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. புதன்கிழமை மாத்திரம் 930 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் டெல்டா பரவல் காணப்பட்ட போது நாளாந்தம் 500 தொற்றாளர்களே இனங்காணப்பட்டனர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளது. ஒமிக்ரோன் மிக வேகமாக பரவி வருகின்றமையே இதற்கான காரணமாகும்.

எவ்வாறிருப்பினும் ஒமிக்ரோன் மிக வேகமாகப் பரவக் கூடியது என்ற போதிலும், தீவிர நிலைமையை ஏற்படுத்தக் கூடியதல்ல.

எனவே இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"கண்டி பெருநகர அபிவிருத்தி” வேலைத்திட்டத்துக்கு 1,500...

2023-11-30 11:50:14
news-image

கிளிநொச்சி பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்...

2023-11-30 12:59:15
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-11-30 12:49:18
news-image

அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களில் மாற்றமில்லை இரண்டாம் தவணை...

2023-11-30 12:42:01
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை எதிர்வரும்...

2023-11-30 12:31:04
news-image

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த...

2023-11-30 12:23:54
news-image

பெண்ணின் முச்சக்கர வண்டி கொள்ளை ;...

2023-11-30 11:49:48
news-image

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிப் பிரயோக...

2023-11-30 11:48:43
news-image

ராகம வைத்தியசாலையின் புற்றுநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு ...

2023-11-30 11:45:52
news-image

சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடித்த...

2023-11-30 12:10:39
news-image

இவ் வருடத்தில் 21 ஆயிரம் மில்லியன் ...

2023-11-30 11:42:48
news-image

கொள்ளுப்பிட்டியில் சுற்றிவளைக்கப்பட்ட போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

2023-11-30 12:15:34