(எம்.மனோசித்ரா)
இலங்கையர்களின் வாழ்வின் ஒவ்வொரு கோணத்திலும், இலங்கையின் பொருளாதாரத்திலும் இந்தியா மிகவும் நெருக்கமான ஈடுபாட்டினை கொண்டிருப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இலங்கையர்களின் வாழ்வின் ஒவ்வொரு கோணத்திலும் அதேபோல இலங்கையின் பொருளாதாரத்திலும் இந்தியா மிகவும் நெருக்கமான ஈடுபாட்டினை கொண்டிருக்கின்றது.
சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு போன்ற பரந்த விடயங்களை உள்ளடக்கிய இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களின் விஸ்தீரணத்தையும் அவர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன் இருதரப்பு உறவானது விசுவாசம், நட்புறவு, நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர அக்கறை ஆகியவற்றில் வேரூன்றிய ஒன்றாக காணப்படும் அதேவேளை பெறுமானங்கள், பற்றுறுதி, போற்றுதற்குரிய நம்பிக்கைகள் ஆகியவற்றிலும் உறுதியான தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கும் ஒன்றென அவர் வரையறை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM