(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பொருளாதார பிரச்சினை தொடர்பில் சிவில் அமைப்புகளுக்கு விழிப்பூட்டும் கருத்தரங்கு நாளை (29) மாலை 4 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகாா்த்த மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற உள்ளது.

Bandaranaike Memorial International Conference Hall – Lakpura LLC

பேராசிரியை கலாநிதி சந்திமா விஜயகுணவா்த்தன தலைமையிலான இலங்கை மனித நேய அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருக்கின்றது.  இக்கருத்தரங்கில் புத்திஜீவிகள், விவசாயிகள் , வியாபார சமூகங்கள் மற்றும்  மற்றும் சிவில் அமைப்புக்கள் அழைக்கப்பட்டுள்ளன.

இடம்பெற இருக்கும் கருத்தரங்கு தொடர்பாக பேராசிரியை சந்திமா விஜயகுணவா்த்தன குறிப்பிடுகையில்,

நாட்டில் உள்ளூர் உற்பத்திகள்  வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 80 வீதமான  செலவினங்கள்  கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

இதனால் நாம் ஒவ்வொருவரும் அடகு வைக்கப்பட்டுள்ளோம். நமது எதிா்கால பரம்பரையினருக்கு இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியாமல் போய்விடும். 

 எமது  நாட்டின் பரம்பரையாக இருந்து வந்த அரச சொத்துக்கள்  இயற்கை வளங்கள் வெளிநாட்டவா்களினால் சூறையாடப்படுகின்றன. அவற்றினை அடகு வைத்து கடன் பெறப்படுகின்றன. .

தேயிலை, இறப்பர், வாசனைப்பொருட்கள், விவசாயம் போன்ற உற்பத்திகள்  இயற்கையான துறைமுகம் மற்றும்  சுற்றுலாத்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந் நாட்டில் சிறந்த தொரு பொருளாதார கொள்கை இருக்குமானால்  நாம் அந்நிய நாட்டவர்களிடம் கையேந்தத் தேவையில்லை.

இந்த அரசின் தவறான பொருளாதாரக்  கொள்கையினால் நாம் நாளாந்தம் நமது நாட்டை இழந்து வருகின்றோம். அதனால் இதுதொடர்பாக எமது நாட்டில் இருக்கும் புத்திஜீவிகள், விவசாயிகள் , சிவில் அமைப்புகள் மற்றும் வியாபார சமுகங்களை அழைத்து விழிப்பூட்டும் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்ய தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.