இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டிய கலா மந்திர் மாணவிகள் குழுவினரால்  நடன நிகழ்வு ஒன்று அரங்கேற்றப்பட்டது. 

இந் நடன நிகழ்வானது கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை  காலை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்திய தேசிய கொடியேற்றல் நிகழ்வில் போது சிறப்பாக இடம்பெற்றது. 

நாட்டிய கலா மந்திரின் அதிபர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் தலைமையில்  இந்நடன நிகழ்வு இடம்பெற்றது. 

 

(படப்பிடிப்பு :- எஸ். எம். சுரேந்திரன்)