(ஜெ.அனோஜன்)

குறைந்தது மூன்று ரெக்கெட்டுகள் பாக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்திலும், அதை அண்மித்த அமெரிக்க விமான தளத்திற்கு அருகிலும் தரையிறங்கி தாக்கியுள்ளது.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 04:30 மணிக்கு (01:30 GMT) தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலால், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானமொன்று சேதமடைந்துள்ளதாக ஈராக் பொலிஸ் வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

Image

தாக்குதல் காரணமாக எந்த உயிர் சேதமோ அல்லது காயங்கள் எதுவுமோ பதிவாகவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேதமடைந்த விமானம் பயன்பாட்டில் இல்லாத ஈராக் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

Image