இனவாதத்தை தூண்ட திட்டமிடுகின்றது கூட்டு எதிர்க்கட்சி ; விக்ரமபாகு கருணாரத்ன

Published By: Priyatharshan

06 Oct, 2016 | 06:12 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

வடக்கில் இடம்பெற்ற பேரணியை இனவாதமாக மாற்றி அதன்மூலம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுவருகின்றது என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் வடக்கில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியை இனவாத செயலாக காட்டுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி மேற்கொண்டுவருகின்றது. வடக்கில் கடந்த அரசாங்க காலத்தில்  இவ்வாறான பேரணிகள் நடைபெறவில்லையெனவும் தெரிவித்து மக்களை தூண்டிவருகின்றதுடன் இந்த அரசாங்கம் தொடர்ந்து இருந்தால் நாட்டின் இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் பிரசாரம் செய்துவருகின்றது.

மேலும் வடமாகாண முதலமைச்சரின் செற்பாடுகள் பாதுகாத்துவந்த நாட்டின் ஏகாதிபத்தியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமைந்துள்ளதுடன் அரசாங்கமும் இதுதொடர்பில் அலட்டிக்கொள்ளாமல் இருக்கின்றது எனவும் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்து வருகின்றது. இவ்வாறு இனவாதமாக செயற்படுவதன் மூலம் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தலாம் என்பதே இவர்களின் திட்டமாகும். அத்துடன் மகாநாயக்க தேரர்கள் கூட இதுதொடர்பாக முரண்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர். ஆனால் அதனையும் மீறி கூட்டு எதிரணி செயற்படுகின்றது.

அதேபோன்று தற்போது அரசாங்கம் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை தயாரித்து வருகின்றது. மக்களுக்கு நன்மையளிக்கும் வரவு செலவு திட்டமாகவே இம்முறை வரவு செலவு திட்டம் அமையும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் வரவு செலவு திட்டம் தயாரிப்பு விடயத்தில் சர்வதேச நாணயநிதியம் நிதி அமைச்சருடன் முரண்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்ற கடனை அடைப்பதற்கு நாட்டின் வருமானம் அதிகரிக்கப்படவேண்டும். அதற்காக வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என அவர்கள் தெரிவித்துவருகின்றனர்.

ஆனால் மஹிந்த ராஜபக்ஷ்வின் காலத்தில் சர்வதேச வங்கிகள் அந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வந்துள்ளன. சர்வதேச நாணய நிதியம்கூட கடந்த அரசாங்கத்தின் தவறுகளை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அந்த அளவுக்கு சர்வதேச  நாடுகளுக்கு நாட்டுக்குள் இடமளித்து வந்துள்ளது. அதனால்தான்  சர்வதேச நாணய நிதியம் கடந்த அரசாங்கத்துக்கு ஒத்துழைத்து வந்துள்ளது.

அத்துடன் மஹிந்தவின் காலத்தில் 80வீதமான வரி சாதாரண மக்களிடம் இருந்தே பெறப்பட்டது. தனவந்தர்களிடமிருந்துபெறும் நேரடி வரி மூலம் நாட்டுக்கு 10வீத வருமானமே கிடைத்தது. இதனை மாற்றியமைக்க  அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்போது சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துடன்  முரண்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55