துல்கர் சல்மானின் 'ஹே சினாமிகா' வின் புதிய பாடல் வெளியீடு

28 Jan, 2022 | 01:29 PM
image

துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் 'ஹே சினாமிகா' படத்தில் இடம்பெற்ற 'தோழியே..' என்ற புதிய பாடல் வெளியாகி உள்ளது.

நடன கலைஞராகவும், நடன இயக்குநராகவும், நடிகையாகவும் கலை சேவையாற்றி வந்த பிருந்தா, ' ஹே சினாமிகா'  படத்தின் மூலம் இயக்குநராகவும் உயர்ந்திருக்கிறார். 

இந்தப்படத்தில் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் அதிதி ராவ் ஹையாத்ரி, ஷியாம் பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோவிந் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் தயாராகியிருக்கும் ' ஹே சினாமிகா' படம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது. 

இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற சிங்கிள் டிராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

தற்போது படத்தில் இடம் பெற்ற நட்பை மையப்படுத்திய 'யாரோடும் காணாத தூய்மையே..' எனத் தொடங்கும் பாடல் வெளியாகியிருக்கிறது. 

கோவிந்த் வசந்தாவின் இசை அமைப்பில் மதன் கார்க்கி வரிகளில் உருவான இந்தப் பாடலை பின்னணி பாடகர் பிரதீப் குமார் பாடியிருக்கிறார். 

இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடன இயக்குநராக இருந்து, இயக்குநராகியிருக்கும் பிருந்தாவின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் ' ஹே சினாமிகா' படம் காதலை மையப்படுத்தி உருவாகி இருப்பதால் இளம் ரசிகர்களிடையே இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்