ஹொரணை - மொரகஹஹென, பெருகொடிய பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன்கள் இருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 43 வயதான மகன் என தெரியவருகின்றது.

மேலும் தந்தை (63) மற்றும் அவரது மகன் (32) ஆகியோர் சம்பவத்தில் பலத்த கயாங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நீண்ட காலமாக இருந்த தனிப்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள்  மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.