(ஜெ.அனோஜன்)

பெப்ரவரியில் உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா இராணுவ நடவடிக்கையினை முன்னெடுக்கக்கூடிய தனித்துவமான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வியாழக்கிழமை உக்ரேன் ஜனாதிபதிக்கு எச்சரித்துள்ளார்.

Russia Ukraine: Biden warns Russia against Ukraine 'red lines' - BBC News

அண்மைய வாரங்களில் உக்ரைனின் எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பது படையெடுப்பு பற்றிய அச்சத்தைத் தூண்டியுள்ளது.

எனினும் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிடுவதாக வெளியான செய்திகளை மொஸ்கோ மறுத்துள்ளது.

இந் நிலையில் வியாழன் அன்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போதே அமெரிக்க ஜனாதிபதி மேற்கண்டவாறு எச்சரித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷ்யர்கள் உக்ரேன் மீது படையெடுப்பதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார் என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் எமிலி ஹார்ன் தெரிவித்துள்ளார்.