கொஸ்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்துருவ புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மருதானையிலிருந்து பொலியத்த நோக்கி பயணித்த ரயிலிலேயே குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மஹா இந்துருவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.