தென் கிழக்கு ஆபிரிக்க நாடுகளைத் தாக்கிய அனா சூறாவளி காரணமாக 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெப்பமண்டல சூறாவளியான அனா வீசியதைத் தொடர்ந்து மடகாஸ்கரில் 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் மலாவி நாட்டில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நாடு முழுவதும் கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மற்றொரு நாடானா மொசாம்பிக்கில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் 3 ஆயிரம் வீடுகள் அழிந்து போனதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

சூறாவளியினால் சிம்பாப்வேயும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளில், பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழையினால் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

பெருக்கெடுத்த ஆறுகளினால் பாலங்கள் மற்றும்  வயல்கள் மற்றும் கால்நடைகளை நீரில் மூழ்கியதால் கிராமப்புற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளன.

இந்நிலையில், மார்ச் மாதத்தில் மழைக்காலம் முடிவடைவதற்கு முன்பு ஆறு வெப்பமண்டல சூறாவளிகள் ஏற்படும் என  எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.