டிக்கோயாவில் பஸ்‍ஸொன்று 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து ; ஒருவர் பலி, 16 பேர் காயம்

By Vishnu

28 Jan, 2022 | 09:31 AM
image

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா சலங்கந்தை - ஹட்டன் பிரதான வீதியின் தரவளை பட்டல்கலை பகுதிக்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர்  காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சலங்கந்தை பகுதியிலிருந்து ஹட்டனில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த பஸ், வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவித்தனர்.

எதிரே வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுக்கு இடம் கொடுக்க முயன்ற போதே, குறித்த தனியார் பஸ் இவ்வாறு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பஸ் சாரதி உட்பட 16 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் டிக்கோயா போடைஸ் பகுதியை சேர்ந்த 62 வயதுடைய பெர்ணாண்டோ மரியசவாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பஸ்ஸின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 17...

2022-11-28 16:54:25
news-image

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் அழைப்பில் அலி...

2022-11-28 16:49:52
news-image

மின்சாரத்தில் சிக்குண்டு யானை உயிரிழப்பு

2022-11-28 16:45:50
news-image

காரை நகரில் நில அளவை மக்களின்...

2022-11-28 16:38:14
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு 5 நிமிடங்களில் மீண்டும்...

2022-11-28 16:31:58
news-image

2023 இல் இலங்கையின் நிலை எவ்வாறானதாக...

2022-11-28 16:34:19
news-image

மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக...

2022-11-28 16:29:49
news-image

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கான காரணத்தை...

2022-11-28 16:28:37
news-image

ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு மன நோயை...

2022-11-28 16:02:34
news-image

வங்கி ATM அட்டைகள் மூலம் பண...

2022-11-28 15:55:24
news-image

மத்திய வங்கி ஆளுநர் மீது ஜனாதிபதியின்...

2022-11-28 15:41:55
news-image

மக்கள் போராட்டம் ஓயவில்லை என்பதை ராஜபக்ஷக்கள்...

2022-11-28 15:02:21