(ஜெ.அனோஜன்)

துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் 'Mevlut Cavusoglu' ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

அவருடன் 13 பேர் கொண்ட குழுவும் நாட்டை வந்தடைந்துள்ளது.

துருக்கியில் இருந்து விசேட விமானம் மூலம் வருகை தந்த குழுவினர் இன்று காலை 6.00 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த தூதுக்குழுவினரை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கைக்கான துருக்கிய தூதுவர் வரவேற்றனர்.

May be an image of 9 people, people standing and indoor

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கைக்கான துருக்கிய தூதுவர் குழுவை BIA இல் வரவேற்றனர்.

துருக்கி வெளியுறவு அமைச்சரின் விஜயத்துக்கான நோக்கம் நிறைவடைந்ததும், தூதுக்குழுவினர் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர்.

May be an image of 4 people, people sitting, people standing and indoor