(ஜெ.அனோஜன்)

திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த இத்தாலியின் மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

May be an image of 12 people and people standing

விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் பூதவுடலை சுமந்த விமானம் துருக்கியிலிருந்து மாலே ஊடாக நேற்றிரவு 8 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

விமான நிலையத்தை வந்தடைந்த பூதவுடலை விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

2022 ஜனவரி 17 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக விஷாரத நீலா விக்கிரமசிங்க உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.