இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

Published By: Digital Desk 4

27 Jan, 2022 | 09:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு எதிரான ஒரு தடுப்பூசியை பெற்றுக் கொண்டு இலங்கைக்கு வருகை தரும் இரட்டை குடியுரிமையாளர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களாக கருதப்படுவர்.

தேசிய தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் இன்று முதல் ஆரம்பம் : 30 வயதிற்கு  மேற்பட்டோருக்கு தடுப்பூசி ! | Virakesari.lk

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர் 50000 ஆயிரம் டொலர் காப்புறுதியை பெற்றிருத்தல் வேண்டும்.இலங்கையில் வசிக்கும் காலப்பகுதியில் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானால் வைத்தியசாலை சிகிச்சைக்கு காப்புறுதி ஊடாக செலுத்தப்படும்  சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் இரட்டை குடியுரிமையுடைவர்கள்,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக செயற்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் முறைமை தொடர்பில் திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கையினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்.

புதிய சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு எதிரான ஒரு தடுப்பூசியை பெற்று கடந்த ஆறு மாதங்களில் கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இரட்டை குடியுரிமையினை கொண்டவர்களம்,இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டவர்களும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக கருதப்படுவர்.

மேலும் நாட்டிற்கு வந்தவுடன் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் போது 30ற்கும் குறைவான சி.டி (நோயறிதல் நுட்பம்) பரிசோதனை முடிவுகளைக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கையர்கள்  7 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு இணங்கி விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியும்.

30ற்கும் அதிகமான சி.டி பெறுபேறுகளை கொண்டவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு தேவையான சகல வசதிகளும் இருந்தால் மாத்திரமே அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

அத்துடன் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்ட பெற்றோருடன் வருகை தரும் 12 வயதிற்கு குறைவான பிள்ளைகள் கொவிட் பரிசோதனைகளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படுவதுடன்,

12 வயது தொடக்கம் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஒரு தடுப்பூசிகளையேனும் பெற்றிருப்பார்களாயின் அவர்கள் பெற்றோருடன் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவர்.

கொவிட் -19 வைரஸ் அதி அவதானத்திற்குள்ளாகியுள்ள நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்துவது தொடர்பிலான தீர்மானம் அவர்களின் பரிசோதனை அறிக்கைகளுக்கு அமைய தீர்மானிக்கப்படும்.அதன்படி அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்கள் தொடக்கம் 14 வரை மாறுப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர் 50000ஆயிரம் டொலர் காப்புறுதியை பெற்றிருத்தல் வேண்டும்.இலங்கையில் வசிக்கும் காலப்பகுதியில் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானால் வைத்தியசாலை சிகிச்சைக்கு காப்புறுதி ஊடாக செலுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெப்பச் சுட்டெண் உயர்வு: 6 மாவட்டங்களுக்கு...

2026-07-12 07:03:38
news-image

மத்துகமவில் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச்...

2026-07-12 05:14:05
news-image

நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து...

2026-07-11 18:53:09
news-image

ஜூனில் வெளிநாட்டு தொழிலாளர் பணவணுப்பல் வருவாய்...

2026-07-11 18:52:32
news-image

தேசிய பாதுகாப்பு மிக உயர்ந்த மட்டத்தில்...

2026-07-11 18:44:37
news-image

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கிறது:...

2026-07-11 18:06:59
news-image

மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய...

2026-07-11 18:06:42
news-image

காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பைப் பயன்படுத்திய திறைசேரி...

2026-07-11 18:00:43
news-image

சந்தை சக்திகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவின்...

2026-07-11 18:00:19
news-image

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரச்...

2026-07-11 15:38:57
news-image

டெங்கு நோயாளர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க ஐ.டி.எச்...

2026-07-11 18:34:14
news-image

நீதி அமைச்சரை பதவி நீக்காமல் நீர்கொழும்பு...

2026-07-11 15:38:21