ஆதிவாசி தலைவரின் ரிட் மனு விசாரணைக்கு ஏற்பு

Published By: Digital Desk 4

27 Jan, 2022 | 09:31 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மஹியங்கனை - ரம்பக்கன் ஓயாவை  சூழ உள்ள ஆதிவாசிகளின் பூர்வீக காணிகளை மகவலி அதிகார சபையின் கீழ் கையகப்படுத்தி அதனை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சோளப் பயிர் செய்கை மேற்கொள்வதற்காக வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்குரிய தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி ஆதிவாசிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை  மேன் முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

ஆதிவாசி தலைவர் ஊருவரிகே உட்பட 44 பேருக்கு கொவிட் | தினகரன்

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ மற்றும் சுற்றாடல் நீதிக்கான மையம், அதன் தலைவர் ஹேமந்த சிசிர குமார ஆகியோரால்  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்  எழுத்தானை கோரி  தாக்கல் செய்யப்பட்டுள்ள  இந்த மனுவை எதிர்வரும்  ஏப்ரால் 5 ஆம் திகதி விசாரணைக்கு  எடுத்துக்கொள்ள மேன் முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை ( 27) தீர்மானித்தது.

அதன்படி மனுவின் பிரதிவதிகளான மத்திய சுற்றாடல் அதிகர சபை, அதன் பணிப்பாளர் நாயகம் பி.பீ. ஹேமந்த ஜயசிங்க, , வனஜீவராசிகள் திணைக்களம், அதன் பணிப்பாளர் நாயகம்,  மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, அதன்  பணிப்பாளர் நாயகம்  பி.ஏ. சுனில் எஸ். பெரேரா,  வனப்பாதுகாப்பு திணைக்களம், அதன் பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோருக்கு அன்றைய தினம் மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க அறிவித்தல் அனுப்புமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தர்விட்டது.

 மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தனர்.

முன்னதாக இந்த ரிட் மனுவானது  சட்டத்தரணி நில்மல் விக்ரமசிங்க ஊடாக  தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மஹியங்கனை, பொல்பெத்த - ரம்புக்கண் ஓயாவை அண்மித்து, தமது மக்கள்  பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்திய, வாழ்வாதாரத்துக்காக பாதுகாத்த வனத்தில், ஐயாயிரம் ஏக்கருக்கும் அதிக நிலப்பரப்பை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்தி பாரியளவிலான சோளப் பயிர் செய்கைக்கு வழங்குவதாக குறித்த மனுவில் ஆதிவாசிகளின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனால்  தமது வாழ்வாதாரம்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதகவும், ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ மற்றும் சுற்றாடல் நீதிக்கான மையத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த ரிட் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கையகப்படுத்தப்பட்ட  காணியை நிறுவனங்களுக்குப் பெற்றுக்கொடுப்பதனூடாக றம்புக்கன் ஓயாவுக்கு நீரை கொண்டு செல்லும் ஓடைக்கு சட்டவிரோதமான முறையில் தடை ஏற்படுத்தப்படுவதால் பாரிய சூழல் பாதிப்பும் ஏற்படக்கூடும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக இந்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறும் அது தொடர்பில்  பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும்  மனுதாரர்கள் பிரதான கோரிக்கையாக இம்மனுவூடாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11
news-image

திருடிய குற்றத்துக்காக எவரையும் தாக்க முடியாது...

2023-09-26 19:56:45
news-image

டியாகோகார்சியாவில் சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின்...

2023-09-26 16:45:18