(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் இன்று வியாழக்கிழமை சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 23 கொவிட் - 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இன்றைய தினம் பதிவான 23 மரணங்களில் 8 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களுள் 12 பேர் 60 வயதிற்கு மேற்பட்டோராவர்.

அதன்படி இதுவரையான காலப்பகுதியில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,369ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற  மேலும் 249பேர் குணமடைந்துள்ளார்கள். அதற்கமைய  நாட்டில் கொவிட் -19 வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 577,030 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.