பாம்புகளின் வசிப்பிடமாகவும் டெங்கு பரவும் இடமாகவும் மாறியுள்ள ஓட்டமாவடி சிறுவர் பூங்காவை புனர்நிர்மாணம் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட குறித்த சிறுவர் பூங்கா பல வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகிறது.
குறித்த சிறுவர் பூங்காவும் அதனைச் சுற்றியுள்ள சூழலும் புற்கள் முளைத்து காடுகளாக காட்சியளிக்கிறது.
அத்துடன், சிறுவர்கள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் சேதமைடைந்து, அதனுள் மழை நீர் தேங்கி நின்று டெங்கு பெருகும் நிலை காணப்படுவதுடன், சிறுவர் பூங்கா பாம்புகளின் வசிப்பிடமாகவும் மாறியுள்ளது.
கவனிப்பாரற்ற நிலையில் காணப்படும் குறித்த சிறுவர் பூங்காவை பிரதேச சபை நிர்வாகம் கவனம் செலுத்தி, புனர்நிர்மாணம் செய்து முறையாக பராமரித்து சிறுவர்கள் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM