(இராஜதுரை ஹஷான்)
கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பிலான உண்மை தரவுகள் வெளிப்படுத்தப்படுவதில்லை.தற்போதைய நிலைமையில் நாடுதழுவிய ரீதியில் தினசரி 2000 ஆயிரம் தொடக்கம் 2500 வரையிலான தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள்.
நிலைமை எல்லை கடந்து சென்றால் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
கொவிட் -19 வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றுவதை மறந்துள்ளதுடன் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதையும் புறக்கணித்து வருகிறார்கள்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் நடைமுறை தன்மை குறித்து குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட் -19 தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கு பொது மக்கள் மத்தியில் காணப்பட்ட ஆர்வம் மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் வெகுவாக குறைவடைந்துள்ளது.
கொவிட் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தல் 98 சதவீதத்தை அண்மித்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட தடுப்பூசி இதுவரையான காலப்பகுதியில் 25-30 சதவீதமளவில் மாத்திரம் செலுத்தப்பட்டுள்ளன.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படும் என சமூகத்தின் மத்தியில் காணப்படும் நிலைப்பாடு தவறானது.
எந்தவொரு தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டாலும் காய்ச்சல்,உடல் சோர்வாக இருப்பது இயல்பானது.
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதை மக்கள் புறக்கணிப்பதற்கான அல்லது ஆர்வம் செலுத்தாமல் இருப்பதற்கான சூழலை சுகாதார அமைச்சே ஏற்படுத்திக் கொடுத்தது.
கொவிட் வைரஸ் தொற்று தற்போது இல்லை.மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றாது சுதந்திரமாக செயற்படலாம் என்று கருதும் அளவிற்கு சுகாதார அமைச்சு கொவிட் வைரஸ் தொடர்பான சுகாதார கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தியது.
இதனால் மூன்றாம் கட்ட தடுப்பூசி பெற்றுக் கொள்வது அவசியமில்லை என பொது மக்கள் தீர்மானித்துள்ளார்கள்.
தற்போதைய நிலைமையில் தினசரி 2000ஆயிரம் தொடக்கம் 2500 வரையிலான தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஏன் அதிகரிக்கவில்லை என்ற கேள்வி மறுபுறம் எழும்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொவிட் -19 இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.தடுப்பூசி மரணத்தை தடுக்கும்.
பொது மக்கள் ஆரம்ப கட்டத்தில் பின்பற்றிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
ஏனெனில் கடந்த இரண்டு வருடகாலமாக நாட்டு மக்கள் கொவிட் -19 சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுடன் வாழ்கிறார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM