ஜனவரி 31 வரை மின்வெட்டு இல்லை

Published By: Vishnu

27 Jan, 2022 | 06:06 PM
image

இன்று (ஜனவரி 27) முதல் 2022 ஜனவரி 31 ஆம் திகதி வரை திட்டமிட்ட மின்வெட்டுக்கான அவசியமில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை மீண்டும் இன்று பரிசீலணைக்கு எடுத்து கொண்டே போதே அவர் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

நாங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அவற்றிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்களை தினசரி அடிப்படையில் மதிப்பாய்வு செய்கிறோம். அந்த மதிப்பாய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே மின் தடையின் அவசியத்தை நாங்கள் தீர்மானிக்கிறோம்.

கடந்த இரண்டு முறையும் மின்வெட்டு இல்லாமல் தடையில்லா விநியோகம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தோம். 

அதன்படி இன்று முதல் ஜனவரி 31 ஆம் திகதி வரையிலான நிலவரத்தை இன்று ஆய்வு செய்தோம். அதற்கிணங்க 29 மற்றும் 30 ஆகிய வார இறுதி நாட்களில் மின் தடை அவசியமில்லை.

ஆகவே இந்த காலகட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு ஆதரவளிக்குமாறும் நுகர்வோர் மற்றும் நிறுவனங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மின்சார நெருக்கடிக்குத் தீர்வாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான மின் உற்பத்தியாளர்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கான அமைப்பை உருவாக்கவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31