காட்டு யானையிடம் இருந்து மகளை பாதுகாத்த தாய் 

27 Jan, 2022 | 09:13 PM
image

தம்புத்தேகம – தேக்கவத்த பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பாடசாலை மாணவி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம்  ஒன்று 26 ஆம் திகதி புதன்கிழமை  இடம்பெற்றுள்ளது. 

13 வயதுடைய சிறுமியே இவ்வாறு தாயாரால் பாதுகாக்கப்பட்டு உயிர் தப்பியுள்ளார். 

குறித்த சிறுமியின் பாட்டியின் வீட்டிற்கு காட்டு யானை ஒன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தனது தாயாருடன் அங்கு சென்றுள்ளார். 

பின்னர் தாய் பாட்டியின் வீட்டில் இருந்துள்ள நிலையில் சிறுமி பாடசாலைக்கு செல்வதற்காக  தனது வீட்டை நோக்கி சென்றுள்ளார். 

இதன் போது திடீரென எதிரே வந்த காட்டு யானை சிறுமியை துரத்தியுள்ளது. 

மேலும் சிறுமியின் கூக்குரலை கேட்டு அப் பகுதியை நோக்கி விரைந்த தாயும் பாட்டியும் சிறுமியை பாதுகாத்துள்ளனர். 

தனது மகளை யானை தும்பிக்கையால் தாக்கியதாகவும் , இதன் போது அவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் யானையிடமிருந்து தனது மகளை பாதுகாத்ததாகவும் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31