(ஜெ.அனோஜன்)

பாணந்துறை பகுதியில் அம்பியூலன்ஸ் வாகனம் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்புலன்ஸ் வாகனம் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்குள் நுழைய முற்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நால்வர் அம்பியூலன்ஸ் வாகனத்தின் சாரதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்கள் வைத்திருந்த துப்பாக்கி செயலிழந்தன் காரணமாக அதிர்ஷ்டவசமாக துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்படவில்லை.

முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.