நாட்டில் மேலும் 1,581 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 மற்றும் 20 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இந்த கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும் இவர்கள் கொவிட் தொற்றாளர்களில் அட்டவணையில் காணப்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தேசிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படாதிருந்தனர்.

இந் நிலையில் இவர்களில் தொகையுடன் நாடளாவிய ரீதியில் அடைளாம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களில் எண்ணிக்கை தற்போது 606,162 ஆக அதிகரித்துள்ளது.

இதேவ‍ேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நபர்களில் எண்ணிக்கையும் 576,781 ஆக காணப்படுகின்ற நிலையில், தற்சமயம் 14,035 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கொவிட் தொற்றினால் 15,346 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு உறுதிபடுத்தியுள்ளது.