சிறப்பு யோசனை திட்டத்துடன் ஜனாதிபதியை சந்திக்க தயாராகும் 10 பங்காளி கட்சிகள் 

Published By: Digital Desk 4

27 Jan, 2022 | 12:48 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடு எதிர்க்கொண்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான யோசனையை  ஜனாதிபதியிடம்  முன்வைக்க  ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் 10 பிரதான பங்காளி கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இந்தியாவை நம்பிப் பலனில்லை : சர்வதேசத்திடம் முறையிட வேண்டும் - திஸ்ஸ விதாரண  | Virakesari.lk

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி தலைவர்கள், உறுப்பினர்களுக்கிடையில் ஸ்ரீ லங்கா கம்யூனிச கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

நாடு எதிர்க்கொண்டுள்ள பல்துறைசார் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் பலமுறை அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளோம்.இருப்பினும் எமது யோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் நாடு பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது.பொது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பிலான யோசனைகளை நாளை அல்லது நாளைமறுதினம் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் முன்வைக்கவுள்ளோம்.

அரச தலைவர்களுக்கும், கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையில் தற்போது சுமுகமான தன்மை காணப்படுவதில்லை. கூட்டணியில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரச தலைவர்களுடன் பங்காளி கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் திட்டமிட்ட வகையில் பிற்போடப்பட்டு வருகின்றன.

நெருக்கடியான சூழ்நிலையினை கருத்திற் கொண்டே மக்கள் அரசியல் ரீதியி;ல் தீர்மானங்களை முன்னெடுப்பார்கள்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் மக்கள் அரசியல் ரீதியில் எவ்வகையான தீர்மானங்களை மேற்கொள்ளார்கள் என்பதை தற்போது நன்கு ஊகித்துக் கொள்ள முடிகிறது என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான அதுரலியே ரத்ன தேரர்,வீரசுமன வீரசிங்க,டிரான் அழஸ்,கெவிது குமாரதுங்கவும், அமைச்சர்களான விமல் வீரவன்ச,உதய கம்மன்பில,வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் ஸ்ரீ லங்கா கம்யூனிச கட்சியின் பிரதான செயலாளர் விசேட வைத்தியர் ஜி.வீரசிங்க,முன்னாள் அமைச்சர் டி.யு குணசேகர ஆகியோர்  பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை...

2024-03-04 01:35:24
news-image

வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல் ;...

2024-03-04 01:25:16
news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00