(ஜெ.அனோஜன்)
உக்ரேனின் டினிப்ரோ நகரில் தேசிய காவல் அதிகாரியொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டினை நடத்திய துப்பாக்கிதாரி இன்னும் தலைமறைவான நிலையில் உள்ளதாகவும், துப்பாக்கி சூட்டினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களில் நால்வர் இராணுவ வீரர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மற்றையவர் சிவிலியன் பெண் ஆவார்.
வியாழன் அதிகாலை டினிப்ரோவில் அமைந்துள்ள இராணுவ ஏவுகணைத் தொழிற்சாலையிலேயே இந்த சம்பவம் நடத்துள்ளதாகவும் உள்துறை அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூடு முன்னெடுக்கப்பட்டமைக்கான உறுதியான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கூறவில்லை.