அருள்நிதி நடிப்பில் தயாராகியிருக்கும் 'தேஜாவு' படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. இதனை நடிகரும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அறிமுக இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'தேஜாவு'. இதில் நடிகர் அருள்நிதி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகைகள் ஸ்மிருதி வெங்கட், மதுபாலா, நடிகர்கள் காளி வெங்கட், மைம் கோபி ராகவ் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. டீஸரில் நடிகர் அருள்நிதி சீருடை அணியாத பொலிஸ் அதிகாரி வேடத்தில் கம்பீரமாக தோன்றுவதால், எதிர்பார்த்ததைவிட கூடுதலான வரவேற்பு கிடைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM