(ஜெ.அனோஜன்)
உக்ரேனை நேட்டோவில் இருந்து தடைசெய்ய வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையினை புதனன்று அமெரிக்கா நிராகரித்ததுடன், கெய்வின் எல்லைகளுக்கு அருகே மொஸ்கோவின் இராணுவக் குவிப்பால் தூண்டப்பட்ட நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வுக்கும் அழுத்தம் கொடுத்தது.
உக்ரேன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மொஸ்கோவின் கோரிக்கைகளுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கன் ரஷ்யாவுக்கு முறையான பதிலைக் கொடுத்தார்.
இந் நிலையில் நேட்டோவுடன் ஒருங்கிணைந்து வழங்கப்பட்ட பிளிங்கனின் பதிலை தனது நாடு ஆய்வு செய்யும் என்று ஒரு ரஷ்ய அமைச்சர் கூறினார்.
நேட்டோ இராணுவக் கூட்டணியின் விரிவாக்கம் மற்றும் அது தொடர்பான பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த தனது கவலைகள் பற்றிய எழுத்துப்பூர்வ பட்டியலை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
உக்ரேனும் மற்றவர்களும் கூட்டணியில் சேரும் வாய்ப்பை நேட்டோ நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அவற்றில் இருந்தது.
அண்மைய வாரங்களில், உக்ரேன் எல்லையில் ரஷ்யா அதிக எண்ணிக்கையிலான வீரர்களை குவித்து வருகிறது - இது சாத்தியமான படையெடுப்புக்கான தயாரிப்பாக மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன. எனினும் இதனை ரஷ்யா மறுக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM