(ஜெ.அனோஜன்)

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஒருநாள் மற்றும் டி:20 அணியின் முன்னாள் தலைவருமான லசித் மலிங்கா, எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான தேசிய அணியின் ‘வியூக பந்து வீச்சு பயிற்சியாளராக’ நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Former Sri Lanka pacer Lasith Malinga

மலிங்க ஒரு சிறப்பு பயிற்சியாளராக தனது புதிய குறுகிய கால பாத்திரத்தில், இலங்கையின் பந்துவீச்சாளர்களுக்கு தனது பங்களிப்பினை வழங்குவார்.

அதன்படி தந்திரோபாய நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கி, மூலோபாய திட்டங்களை களத்தில் செயல்படுத்த உதவுவார்.

மலிங்காவின் பரந்த அனுபவமும், புகழ்பெற்ற டெத்-பவுலிங் நிபுணத்துவமும், குறிப்பாக டி:20 வடிவத்தில், இந்தத் தொடருக்கு அணிக்கு பெரிதும் உதவும் என்று இலங்கை கிரிக்கெட் நம்புகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மலிங்க,

எங்களிடம் சில திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் உள்ளனர், மேலும் எனது அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அவர்களை மேம்படுத்துவதற்கு உதவுகிறேன் என்றார்.

இலங்கை கிரிக்கெட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவால் அவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 பெப்ரவரி 1 முதல் 20 வரை அவரது நியமனம் அமலில் இருக்கும்.