(எம்.எம்.சில்வெஸ்டர் )

சமையல் எரிவாயு கசிவு உள்ளதென சந்தேகிக்கப்படும் சமையல் எரிவாயு முடிவடையாத சிலிண்டர்களை கையளிக்க விருப்பமான நுகர்வோரிடமிருந்து பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் லிட்ரோ மற்றும் லாப் நிறுவனங்களுக்கு அறிவுரை விடுத்துள்ளார்.

அவ்வாறு நுகர்வோரிடமிருந்து பொறுப்பேற்றுக்கொள்ளப்படும் சிலிண்டர்களிலுள்ள எஞ்சிய சமையல் எரிவாயுவின் அளவைக் கணிப்பிட்டு,  புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொள்வனவு செய்யப்படும்போது அதற்கான விலையை கழித்துக்கொடுக்கும்படி நுகர்வோர் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், சமையல் எரிவாயு கசிவு உள்ளதென சந்தேகிக்கப்படும் சமையல் எரிவாயு முடிவடையாத சிலிண்டர்களை விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுக்கு கையளிக்கும்போது, அவர்கள் அதனை பொறுப்பேற்க மறுத்தால் நுகர்வோர் அதிகார சபையின் 1977 எனும்  துரித தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுக்கும்படி நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் நுகர்வோரிடம் கேட்டுக்கொண்டார்.