இரத்மலானை விமான நிலையத்துக்கான பிரவேசவீதி அபிவிருத்தி  செய்யப்படும் - ஜோன்ஸ்டன்

26 Jan, 2022 | 05:15 PM
image

சுற்றுலாத்துறை அமைச்சர்  பிரசன்ன ரணதுங்க மற்றும் சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டிவி சானக்க ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக இதுவரை அபிவிருத்தி செய்யப்படாத இரத்மலானை விமான நிலைய பிரவேச வீதியை துரிதமாக அபிவிருத்தி செய்யுமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ,வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம் மற்றும் கொழும்பு பிரதான பொறியியல் அலுவலக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 

நாடு மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம், இலங்கை தற்போது அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. 

இரத்மலானை விமான நிலையத்திற்கான பிரவேச வீதியின் அபிவிருத்திப் பணிகள் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

ரத்மலானை விமான நிலையத்திற்கு  உள்நாட்டு விமான பயணங்களுக்காக  வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கும் இந்த பாதையை பயன்படுத்தும் விமானப்படை வீரர்களுக்கும் இந்த பாதையின் அபிவிருத்தி பணிகள் 20 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். 

இரத்மலானை விமான நிலையத்திற்கு செல்லும் பாதையின் நீளம் 1.6 கி.மீ. களாகும்.இதற்காக 99.3 மில்லியன் செலவிடப்படவுள்ளது. 

20.4 மில்லியன் ரூபாயில் நடைபாதை அமைப்பதற்கும், 24.8 மில்லியன் ரூபா வீதியின் இருபுறங்களிலும் வீதி விளக்குகள் அமைப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் தமிழர்கள் உயிர் நீத்தமைக்கான காரணம்...

2023-02-04 17:54:36
news-image

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு...

2023-02-04 18:25:06
news-image

75 வருட சுதந்திர இலங்கையில் நாம்...

2023-02-04 18:31:07
news-image

சவால்களுக்கு நீங்கள் தனித்து முகங்கொடுக்கவில்லை என்பதை...

2023-02-04 18:34:09
news-image

ஒற்றையாட்சி அரசில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான...

2023-02-04 18:52:41
news-image

உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற சுதந்திர...

2023-02-04 18:28:58
news-image

அம்பாறை காட்டுப்பகுதில் கஞ்சா தோட்டம் முற்றுகை...

2023-02-04 18:27:00
news-image

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளாத...

2023-02-04 14:51:20
news-image

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்...

2023-02-04 18:32:12
news-image

யாழில் இடம்பெற்ற 75 ஆவது சுதந்திர...

2023-02-04 18:27:56
news-image

வெளிநாட்டுத் தூதுவர்களுக்கான கண்டி நிகழ்வு குறித்த...

2023-02-04 14:39:02
news-image

சுதந்திர தினத்தில் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம்

2023-02-04 14:36:49