விவசாயிகளுக்கான 40 பில்லியன் ரூபா இழப்பீட்டு நிதி எவ்வாறு திரட்டப்படும் ? - எரான் கேள்வி

Published By: Digital Desk 3

26 Jan, 2022 | 04:24 PM
image

(நா.தனுஜா)

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

இவ்வருடத்திற்கான வரவு, செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டு ஒருமாதம் கடந்துள்ள நிலையில், அதற்கு அப்பால் விவசாயிகளுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கான நிதி எவ்வாறு திரட்டப்படும்? அதேபோன்று இழப்பீட்டை வழங்குவதன் மூலம் இவ்விடயத்தில் தவறு இடம்பெற்றிருக்கின்றது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது.

அவ்வாறெனின், இந்தத் தவறுக்குப் பொறுப்புக்கூறப்போவது யார்? இரசாயன உர இறக்குமதித்தடை தொடர்பான தீர்மானம் யாரால் மேற்கொள்ளப்பட்டது? இழப்பீடாக வழங்கப்படவுள்ள நிதி பொதுமக்களுக்குச் சொந்தமானது என்பதனால், இக்கேள்விகளுக்கான தெளிவுபடுத்தல்களை அரசாங்கம் நிச்சயமாக வழங்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

பிரதமருக்கான சத்திரசிகிச்சை நிறைவடைந்திருக்கும் நிலையில் அவர் முழுமையாகக் குணமடையவேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்.

அவரது சத்திரசிகிச்சைக்காக பிரிட்டனிலிருந்து தலைசிறந்த சத்திரசிகிச்சை நிபுணர் ஹிலாரி நூர்தீன் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக அறிந்தோம். எந்தவொரு விடயமானாலும், அதனைக் கையாளும் பொறுப்பை மிகப்பொருத்தமான நபர்களிடம் ஒப்படைப்பது சிறந்ததாகும்.

அடுத்ததாக அரசாங்கம் மேற்கொண்ட தவறான தீர்மானங்களினால் அண்மையகாலங்களில் நாடு மிகமோசமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருகின்றது.

அதன் ஓரங்கமாக எவ்வித விஞ்ஞானபூர்வ அடிப்படைகளும் தூரநோக்கு சிந்தனையுமின்றி இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தினால் இன்றளவிலே நாட்டின் விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சிகண்டிருக்கின்றது. 

நல்லாட்சி அரசாங்கத்தினால் சந்தையில் 1,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உரமூட்டை இப்போது 8,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. உரம் தொடர்பான இத்தீர்மானம் விவசாயிகள்மீது மாத்திரமன்றி, நுகர்வோர்மீதும் மிகமோசமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. 

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. 

இவ்வருடத்திற்கான வரவு, செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டு ஒருமாதம் கடந்துள்ள நிலையில், அதற்கு அப்பால் விவசாயிகளுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு எங்கிருந்து நிதி திரட்டப்பட்டுள்ளது? அதேபோன்று இழப்பீடு வழங்கப்படுகின்றது என்றால், இவ்விடயத்தில் தவறு இடம்பெற்றிருக்கின்றது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. 

அவ்வாறெனின், இடம்பெற்ற தவறுக்குப் பொறுப்புக்கூறப்போவது யார்? இரசாயன உர இறக்குமதித்தடை தொடர்பான தீர்மானம் யாரால் மேற்கொள்ளப்பட்டது? இழப்பீடாக வழங்கப்படவுள்ள நிதி பொதுமக்களுக்குச் சொந்தமானது என்பதனால், இக்கேள்விகளுக்கான தெளிவுபடுத்தல்களை வழங்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

அதேபோன்று கடந்த காலங்களில் 50 ரூபாவிற்குக் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லுக்கான விலையை 75 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு அரசாங்கம் நெல்லை அதிக விலைக்குக் கொள்வனவு செய்யும்போது, சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற அரிசியின் விலையும் உயர்வடையும். எனவே வெகுவிரையில் ஒருகிலோ அரிசியின் விலை 200 ரூபாவை விட அதிக விலைக்கு விற்பனைசெய்யப்படும்.

அத்தோடு இந்தியாவிலிருந்து 5 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் இறக்குமதி செய்யப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது யாரால், என்ன விலைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவேண்டும். 

ஏனெனில் கடந்த காலத்தில் சீனி இறக்குமதியின்போது இடம்பெற்ற மோசடி உள்ளடங்கலாக பல்வேறு மோசடிகளால் பொதுமக்கள் அரசாங்கத்தின்மீது நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள்.

அடுத்ததாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு தங்குமிடவசதி உள்ளிட்ட சேவைகளை வழங்கும் ஹோட்டல் உரிமையாளர்கள் அதற்குரிய கட்டணத்தை டொலர் வடிவிலேயே அறவிடவேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் தமது கொடுப்பனவுகளை டொலர் வடிவில் அல்லது ரூபா வடிவில் அல்லது இலத்திரனியல் அட்டைகள் ஊடாகச் செலுத்துவது வழமையாகும். 

அவ்வாறிருக்கையில் ஹோட்டல் சேவைக்கான கட்டணத்தை டொலர் வடிவில் செலுத்துவதைக் கட்டாயமாக்கும்போது, எமது நாட்டிற்கு வருகைதருவதற்கு சுற்றுலாப்பயணிகள் விரும்புவார்களா? எனவே அரச கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய தீர்மானங்கள் நாட்டிற்குப் பாரதூரமான பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31