(நா.தனுஜா)
எமது நாடு ஏற்கனவே மிகமோசமான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில், பொருட்கள், சேவைகள் மீதான வரிவிதிப்பு தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற புதிய சட்டமூலமானது மிகமோசமான ஊழல்மோசடிகளுக்கும் நிதிநெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அச் சட்டமூலத்தின் ஊடாக நிதியமைச்சர் தமக்கு நெருக்கமானவர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஆகவே பொதுநிதியை நிர்வகிக்கும் அதிகாரத்தைக்கொண்ட பாராளுமன்றத்தைப் புறக்கணிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணான இச்சட்டமூலத்திற்கு எதிராகக் கருத்துக்களை வெளியிடும் அனைத்துத்தரப்பினருக்கும் நாம் ஆதரவளிக்கும் அதேவேளை, இதற்கெதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM