(சுபத்ரா)

“திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை வைத்து, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இந்தியாவின் மூலம் அமைத்த பாதுகாப்பு வேலி, போரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது”

பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்ட திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள், நல்ல நிலையில் இருக்கின்றனவோ இல்லையோ, அவை பாதுகாப்பு நோக்கில் பயன்படுத்தப்படுகின்றன என்பது வெளிச்சமாகியிருக்கிறது.

இயற்கை துறைமுகத்துடன் இணைந்த திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், மீண்டும் அரசியல் களத்தில் முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கிறது.

எண்ணெய் தாங்கிகளின் கொள்திறனை விட, அவற்றின் வணிகப் பெறுமானத்தை விட, அவற்றின் கேந்திர பாதுகாப்பு முக்கியத்துவம் தான் அதிகம்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றிய எதிர்க்கட்சி கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல, வெளிப்படுத்தியுள்ள ஒரு விடயம், இதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து, திருகோணமலையைப் பாதுகாப்பதற்கான ஒரு கவசமாக, இந்த எண்ணெய் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-23#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/