வேனொன்றும், தனியார் பஸ்சொன்றும் நேருக்கு நேர் மோதியதில் வயோதிபப் பெண் உயிரிழப்பு - ஐவர் படுகாயம்

Published By: Digital Desk 4

26 Jan, 2022 | 02:13 PM
image

மொனராகலை தனமல்விலைப் பகுதில் இன்று வேனொன்றும், தனியார் பஸ்சொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியதில் வயோதிபப் பெண்ணொருவர் பலியானதுடன், ஆறு பேர் படுங்காயமடைந்துள்ளதாக தனமல்விலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் மொனராகலை தனமல்விலைப் பகுதியின் கித்துல்கோட்டை என்ற இடத்தில்இன்று  26-01-2022  இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ரன்ஜனி வீரசிங்க என்ற 65 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து குறித்த பெண்ணின் சடலம் தற்போது, தனமல்விலை அரசினர் வைக்கப்பட்டுள்ளது. பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு படுகாயமடைந்த ஆறு பேரும், தனமல்விலை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் வேனொன்றில் மிந்தெனியவில் இடம்பெற்ற மரணக்கிரியை ஒன்றில் கலந்து கொண்ட பின், மீளவும் தனமல்விலைக்கு வீடு நோக்கி திரும்புகையிலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரே, வேனை செலுத்தியுள்ளார். இவர்களது இரு மகள்கள் மற்றும் மூன்றுப் பேரப்பிளைகள் ஆகியோரே, மரணக் கிரியைகளில் கலந்துகொண்டு திரும்பியவர்களென ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனமல்விலைப் பொலிசார் மேற்படி விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், விபத்திற்குள்ளான தனியார் பஸ் சாரதி, பொலிசாரால் கைது செய்யப்பட்டுவிசாரணையின் பின்னர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:56:38
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12