இலங்கையில் புதிய Ford Ranger அறிமுகம்

Published By: Priyatharshan

06 Oct, 2016 | 03:06 PM
image

Ford மோட்டர் கம்பனி மற்றும் அதன் உள்நாட்டு விநியோக பங்காளரான ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ் ஆகியன இணைந்து, புதிய Ranger ரக வாகனத்தை இலங்கையில் அறிமுகம் செய்திருந்தன.

இந்த புதிய Ranger வாகனத்தை நாடு முழுவதிலுமுள்ள Ford காட்சியறைகளில் பார்வையிட முடியும்.

புதிய Ford Ranger இல் பாதுகாப்பு, இயங்குதிறன் மற்றும் உயர் தொழில்நுட்பம் போன்ற வெவ்வேறு அம்சங்கள் பயணிகளுக்கும் சாரதிக்கும் சௌகரியத்தை வழங்கும் வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த Ford Ranger தொடர்பில், Ford மோட்டர் கம்பனியின் ஆசிய பசுபிக் வளர்ந்து வரும் சந்தைகளுக்கான முகாமைத்துவ பணிப்பாளர் டேவிட் வெஸ்டர்மன் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையில் காணப்படும் இதர pickup களுடன் ஒப்பிடுகையில், புதிய Ford Ranger என்பது ‘Built Ford Tough’ எனும் எமது பாரம்பரிய முறைக்கமைய அதிகளவு வலிமையுடனும், அதிக எடையை ஏற்றக்கூடிய திறனையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய பாதுகாப்பு மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஒரே pickup ஆகவும் திகழ்கிறது” என்றார்.

புதிய Ford Ranger இன் எரிபொருள் சிக்கனத்தன்மையை 12 சதவீதத்தால் மேம்படுத்தும் வகையில், புதிய தலைமுறை 3.2-3.2-litre Duratorq five-cylinder மற்றும் 2.2-litre Duratorq four-cylinder TDCi என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய Ford Ranger தொடர்பில் ஃபியுச்சர் ஒடோமொபைல்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி சமத் தென்னகோன் கருத்துத்தெரிவிக்கையில்,

“இலங்கையின் சாரதிகள் ட்ரக் ஒன்றின் திறனையும் பயணிகள் வாகனமொன்றின் சௌகரியத்தையும் எதிர்பார்ப்பதை நாம் அறிவோம். இதனை கவனத்தில் கொண்டு புதிய Ford Ranger அவர்களின் அலுவலக பணிகளுக்காகவும்ரூபவ் குடும்பத்தாருடனான பயணங்களின் போதும் மிகவும் இனியமையான பயண அனுபவங்களை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.

நீரில் 800mm ஆழம் வரையிலும் நிலத்தில் 230mm உயரம் வரையிலும் இயங்கும் புதிய Ranger, மிகவும் மோசமான நிலப்பரப்புகளிலும் மேடு பள்ளங்கள் நிறைந்த பகுதிகளலும் இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சஸ்பென்ஷன் மேலதிக சௌகரியத்தையும் சிறந்த கையாளலையும் வழங்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.

சாரதிகளுக்கு சிறந்த செலுத்துகை அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் electric power-assisted steering (EPAS) system ஐக் கொண்டுள்ளது இது தரித்தல் மற்றும் நெரிசலில் பயணித்தல் போன்று அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்தல் போன்ற நிலைகளில் சாரதிகளுக்கு இலகுவாக கையாளக்கூடிய அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

புதிய Ford Ranger, அதிகளவு ஆறு வேக ஓடோமெடிக் அல்லது மெனுவல் கியர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. அதிகளவு பாரங்களை கொண்டு செல்வதற்கு உதவும் வகையில் Ford இனால் புதிய தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகனத்தினுள்ளே பயணிப்போருக்கு சிறந்த சௌகரியத்தையும் வசதிகளையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் இணைப்பு கட்டமைப்பை கொண்டுள்ளது. இதன் மூலமாக 8 அங்குல வர்ண தொடுதிரை இதில் காணப்படுவதுடன் மகிழ்வூட்டும் அம்சங்கள் மற்றும் காலநிலை கட்டுப்படுத்தல் அம்சங்கள் போன்றவற்றை குரல் மூலமாக கட்டுப்படுத்தக்கூடிய வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் காணப்படும் விசேட அம்சமாக MyKey கட்டமைப்பு காணப்படுகிறது. இதன் மூலமாக வெவ்வேறு அம்சங்களை பதிவு செய்து கொள்ள முடியும் உதாரணமாக அதியுயர் வேக எல்லை ஆசன இருக்கைப்பட்டி நினைவூட்டல் மற்றும் ஓடியோ கட்டமைப்புக்கான ஆகக்கூடிய ஒலி அளவு போன்றன அடங்கியுள்ளன.

வாகனத்தை தரித்து நிறுத்துவதற்கு உதவும் வகையிலான அம்சங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முன்புற மற்றும் பின்புற ஒலி ஊடான உணரிகள் மற்றும் பின்புற கமரா போன்றன காணப்படுகின்றன. கடுமையான வீதி நிலைகளிலும் சாரதிக்கு கட்டுப்பாட்டுடன் வாகனத்தை செலுத்திச் செல்ல உதவும் வகையில் புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சாரதிக்கு உதவும் தொழில்நுட்பங்கள் போன்றனவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உயர் தரமான ஆறு காற்றுப்பைகளை (Air Bags) இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தின் முன்புறம் அதிகளவு நெருக்கமான மற்றொரு வாகனத்துடன் காணப்படும் போது சாரதிகளுக்கு காட்சி மற்றும் ஒலி ஊடான எச்சரிக்கையை வழங்கும் விசேட Forward Alert இதில் பொருத்தப்பட்டு;ள்ளது. மேலும் முன்னால் காணப்படும் வாகன நெரிசலை கண்டறியும் வகையில் செய்மதி ஊடான உணரிகளைக்கொண்டு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் அம்சமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தமக்குரிய வாகன பயண நிரலில் செல்வதை சாரதிக்கு தெரியப்படுத்தும் வகையிலான கமரா பின்புறத்தை பார்வையிடக்கூடிய கண்ணாடியின் பின்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இது வீதியில் காணப்படும் அடையாளங்களை சாரதிக்கு அறிவுறுத்தும். இந்த அறிவுறுத்தலை கவனியாமல் சாரதி வாகனத்தை செலுத்தும்பட்சத்தில் வாகன வரிசையை விட்டு வெளியேறியமையை குறிக்கும் வகையில் சாரதியின் சுக்கானில் vibrate ஏற்படும்.

Ford இன் Electronic Stability Control (ESC) மற்றும் ISOFIX ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் காணப்படுகின்றன. இவை வாகனத்தின் திரும்பல்கள் பற்றிய கணிப்பை சுயமாக மேற்கொள்ளும் திறன் கொண்டதாக அமைந்துள்ளன. வாகனத்தின் வேகத்தையும் இதற்கமைய கட்டுப்படுத்தும் திறன் கொண்டன.

வீதியில் புதிய Ranger இன் நவீன தோற்றம் மற்றும் வலிமையான தன்மை ஆகியன இயலுமையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன. தெரிவு செய்து கொள்வதற்கு ஒன்பது வர்ணங்களில் புதிய Ranger காணப்படுகிறது. இதில் Metropolitan gray, Black Mica, Aluminum Metallic, Cool White, Sparkling Gold, Blue Reflex Mc, Aurora Blue Metallic, True Red மற்றும் Wildtrak தெரிவுக்கு Pride Orange Metallic போன்றன அமைந்துள்ளன. மேலதிக விவரங்களுக்கு: http://www.fordsrilanka.com/ அல்லது தொலைபேசி +94 76 540 8217

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57