இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகல்

By Vishnu

26 Jan, 2022 | 12:57 PM
image

(ஜெ.அனோஜன்)

இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட எம்.எம்.சி.பேர்டினண்டோ, தனது பதவியிலிருந்தும் இலங்கை மின்சார சபையின் உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

CEB | Business With CEB

2022 பெப்ரவரி முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அவர் பதவி விலகியுள்ளதாக மின்சக்தி அமைச்சின் செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலக தீர்மானித்துள்ளதாக பெர்டினாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவ‍ேளை இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக கலாநிதி ரொஹந்த அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் பல வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை அடுத்து இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் சுசந்த பெரேரா பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சூழலில், இலங்கை மின்சார சபையின் உதவிப் பொது முகாமையாளரான சிரேஷ்ட மின் பொறியியலாளர் கலாநிதி ரொஹந்த அபேசேகர இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41