(சி.அ.யோதிலிங்கம்)

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பாக தமிழ்த் தரப்பிலிருந்து பலத்த கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. 

இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக எதுவும் கூறவில்லை என்பதற்காகவே இவை எழுந்துள்ளன. 

சம்பந்தன் பலத்த ஏமாற்றமடைந்துள்ளதாக பஷில் ராஜபக்ஷவிற்கு நேரடியாகவே கோபத்துடன் கூறியுள்ளார்.

சம்பந்தனுக்கு ஏமாற்ற உணர்வு வந்துள்ள போதும் தமிழ் மக்களிடமிருந்து ஏமாற்ற உணர்வு எதுவும் வரவில்லை. 

இந்த அரசு தொடர்பாக தமிழ் மக்களிடம் எந்த நம்பிக்கையோ எதிர்பார்ப்போ இருக்கவில்லை. சம்பந்தனுக்கு பஷில் ராஜபக்ஷ ஏதாவது நம்பிக்கையை கொடுத்திருப்பாரோ தெரியாது. 

இந்த நம்பிக்கையில் தான் இந்திய அரசின் அழைப்பையும் அவர் புறக்கணித்திருக்கலாம்.

சம்பந்தனுக்கு வெளிநோக்கிய அரசியலில் அதாவது சர்வதேசத்தை நோக்கிய அரசியலில் நம்பிக்கை குறைவு. 

அதனால் எப்போதும் இலங்கை அரசு நோக்கிய அரசியலில் தான் அக்கறை காட்டி வருகின்றார். நல்லாட்சிக்காலத்தில் இந்த அணுகுமுறை தெளிவாகத் தெரிந்தது. சம்பந்தனின் இந்தப் போக்கிற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அதில் முதலாவது அமெரிக்க, இந்திய நகர்வுகளில் அவருக்கு நம்பிக்கை இல்லாமையாகும். 

இந்த வல்லரசுகள் தமிழ் மக்களைப் பயன்படுத்தி தங்களுடைய நலன்களை அடைந்து கொள்ள முயற்சிக்கும் என்று அவர் உறுதியாக நம்புகின்றார். 

'அரசனை நம்பி புருசனை கைவிட்டது' போலாகிவிடக்கூடாது என்று அவர் கருதுவது போலத் தெரிகிறது.

இரண்டாவது,  வெளிநோக்கிய அரசியல் தொடர்ச்சியான தமிழ்த் தேசிய அரசியல் வேலைத் திட்டங்களை வேண்டி நிற்கின்றது. சம்பந்தன் அதற்கு தயாரில்லாமையாகும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-23#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/