(ஜெ.அனோஜன்)

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தல பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து 14 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு இணங்க நேற்றைய தினம் குறித்த வர்த்தக நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சிகரெட்டுகளின் தொகை மீட்கப்பட்டுள்ளன.

அதேநேரம் இதன்போது 43 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.

மீட்கப்பட்ட சிகரெட்டுகளின் தொகை சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளும், கைதான சந்தேக நபரும் மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.