(ஜெ.அனோஜன்)

வடகிழக்கு சிரியாவில் முற்றுகையிடப்பட்ட சிறையொன்றுக்குள் ஜிஹாதி தீவிரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் நூற்றுக்கணக்கான சிறுவர்களின் எதிர்காலம் குறித்து அச்சம் எழுந்துள்ளது.

An armoured vehicle rides next to a smoke as Syrian Democratic Forces affiliates clash with the Islamic State militants outside a prison in Hasaka, Syria January 22, 2022, in this screen grab taken from a video. North Press Agency Digital/Handout via REUTERS

கடந்த வியாழன் அன்று இஸ்லாமிய அரசு (IS) குழு போராளிகளால் தாக்கப்பட்டு, முற்றுகையிடப்பட்ட ஹசாக்காவில் அமைந்துள்ள குவேரான் சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 850 சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளை விடுவிக்கும் முயற்சியில் ஐ.எஸ்.ஸுடன் குர்ஷித் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திங்களன்று சிறையில் இருந்த சுமார் 300 தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

குர்திஷ் அதிகாரிகளால் நடத்தப்படும் சிறைகளில் ஆயிரக்கணக்கான ஐ. எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.