(ஜெ.அனோஜன்)

மறைந்த மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு  வரப்படவுள்ளது.

Image

2022 ஜனவரி 17 ஆம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக காலமான மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் சடலம் இன்று அல்லது நாளைய தினம் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவரது சடலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்படும்.

மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்துடன் கலந்தாலோசித்து, திருப்பி அனுப்பும் செயன்முறையை வெளிநாட்டு அமைச்சு ஒருங்கிணைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.