பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து 6 வருடங்களாக மாயமான 4 கோடி ரூபா : மிக நெருங்கிய உதவியாளர் பதவி நீக்கம்

Published By: Digital Desk 4

25 Jan, 2022 | 09:38 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான  அரச வங்கியொன்றிலிருந்த  வங்கிக்கணக்கொன்றிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பணம்,  பிரதமருக்கு மிக நெருக்கமான ஒருவர் ஊடாக கடந்த 6 வருடங்களில் அவ்வப்போது மோசடியாக  பெறப்பட்டுள்ளமை தொடர்பில்  சிறப்பு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.   

இந்தியா பயணமானார் பிரதமர் மஹிந்த | Virakesari.lk

அவ்வாறு விஷேட விசாரணை ஒன்றினை நடாத்துவது தொடர்பில்  அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக  அரசின் நம்பகரமான தகவல் வட்டாரங்கள் வெளிப்படுத்தின.

எவ்வாறாயினும் நேற்று மாலையாகும் போதும் அது குறித்த அதிகாரபூர்வ  தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

பிரதமரின் குறித்த வங்கிக் கணக்கின் தானியக்க பணப் பறிமாற்று அட்டையை பயன்படுத்தி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்,  அவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவருக்கு சம்பளமாக கிடைக்கப் பெற்ற பணத் தொகை எனவும்  ஆரம்பகட்ட தேடுதல்களின் போது தெரியவந்துள்ளது.

 குறித்த  வங்கிக் கணக்கில் பணம் குறைந்துள்ளமை தொடர்பில்  தேடிப் பார்த்த போதே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளதுடன், மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர்,  முன்னாள் சபாநாயகர் ஒருவரின் மகனான மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமான, சில காலம் அவரது தனிப்பட்ட உதவியாளராக செயற்பட்டவர் எனவும்  பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன.

 இந் நிலையில், பண மோசடி தொடர்பிலான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து, குறித்த நபர் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் அலுவலகம் தொடர்பில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கூறபப்டுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07
news-image

மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை:...

2026-09-12 15:45:08
news-image

தெஹிவளை கைகுண்டுத் தாக்குதல்: இலக்கு மாறியதால்...

2026-09-12 15:38:43
news-image

வீடு புகுந்து திருட்டு மற்றும் குற்றச்...

2026-09-12 15:16:55
news-image

26 நகரங்களை அபிவிருத்தி செய்ய 65...

2026-09-12 14:49:30
news-image

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு...

2026-09-12 15:13:56
news-image

தனமல்விலவில் 114 கிலோவிற்கும் அதிக கஞ்சாவுடன்...

2026-09-12 15:11:22
news-image

தனமல்வில வீதி விபத்து: நான்கு இளைஞர்கள்...

2026-09-12 14:48:44
news-image

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் ‘ஸ்மார்ட் சாவிகள்’...

2026-09-12 14:56:17
news-image

சட்டவிரோத மீன்பிடி: இலங்கை கடற்படையினரின் விசேட...

2026-09-12 14:48:21
news-image

அரசாங்கத்தின் செயல்கள் ,வாக்குறுதிகள் நிறைவேற்றாமையை கண்டித்து...

2026-09-12 14:50:18
news-image

கம்பஹாவில் போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது!

2026-09-12 14:49:03