எம்மில் பலரும் சுவைக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட உணவு பதார்த்தத்திற்கோ அடிமையாகி மூன்று வேளையும் அதையே சாப்பிட்டிருப்போம். அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு தானே அதனால் நாம் உடற்பருமனுக்கு ஆளாகி வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம். இந்நிலையில் எம்மைப் போன்றவர்களுக்காகவே ஒரு நவீன சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது. BTL Vanquish MEஎன்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிகிச்சையைப் பற்றி காண்போம்.

இது சத்திர சிகிச்சையற்ற வலியற்ற ஒரு சிகிச்சை ஆகும். இதன் போது, உடலில் எங்கு அதிகப்படியான கொழுப்பு உள்ளதோ அப்பகுதியில் உள்ள சதையை 42 டிகிரி செல்ஷியஸ் வரை சூடு படுத்தியும், அதன் அடியில் இருக்கும் கொழுப்பை 46 டிகிரி வரையிலும் வெப்பமாக்கியும் இந்த சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். கடுமையான உடற்பயிற்சி செய்து கரைக்க வேண்டிய அதிகப்படியான கொழுப்பை எளிதில் இம்முறையில் எரித்து குணப்படுத்துகிறார்கள்.

இந்த வலியில்லாத ஒரு சிகிச்சை முறைக்கு அதிக நேரம் ஆகாது, சிகிச்சைக்குப் பின் கடைபிடிக்கவேண்டியவை என எதுவும் இல்லை. ஒரு சிலருக்கு சிகிச்சை முடிந்த பின் சத்தான உணவும் தேவையான அளவு உடற்பயிற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் போது சதையில் லேசான கதகதப்பான உணர்வு ஏற்படுமே தவிர பயப்படும்படியான சூடு எதுவுமிருக்காது. தங்கள் எடையை விட 20 சதவிகிதம் அதிகப்படியான எடை உள்ளவர்களுக்கு, டைப் 2 சர்க்கரை வியாதி, பக்கவாதம், இதயம் மற்றும் கல்லீரல் மற்றும் மூட்டு வலி எலும்பு சம்மந்தப்பட்ட குறைபாடுகள் ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது என்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

டொக்டர் சுனிதா ரவி

தொகுப்பு அனுஷா,