Published by T. Saranya on 2022-01-25 16:49:31
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு நேற்று திங்கட்கிழமையுடன் 12 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது.

இந்நிலையில், அதனை முன்னிட்டு பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட இன்றைய தினம் கொழும்பு முகத்துவாரம் காளி கோவிலுக்குச்சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

அத்தோடு, தனது கணவனுக்காக கொழும்பு முகத்துவாரம் கடற்கரையில் இந்து ஆகம முறைப்படி முடி இறக்கி வேண்டுதலில் ஈடுப்பட்டார்.

