கிறிஸ்­மஸ் பண்­டிகை நெருங்கி வரு­கின்ற நிலையில், பிரித்­தா­னி­யாவில் மது விற்­பனை கடந்த ஆண்டை விட 125 சத­வீதம் அதி­க­ரித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­படு­கின்­றது. இதனால் வீதி போக்­கு­வ­ரத்து மற்றும் பாது­காப்பு பணி­க­ளில் ­பொ­லிஸார் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளனர். ஏனெனில், இந்­நாளில் மக்கள் அள­வுக்­க­தி­க­மாக மது அருந்­து­வதால், ஒழுங்­கற்ற முறையில் வாகனம் செலுத்­துதல், பாலியல் குற்­றங்­களில் ஈடு­ப­டுதல், உள்­நாட்டு முறை­கேடு போன்ற குற்­றங்கள் அதி­க­மாக நடப்­ப­தற்கு வாய்ப்­பி­ருக்­கி­றது.

காலை 5.00 மணிக்கு மது அருந்­து­வதை தொடங்கும் மக்கள் அந்நாள் முழு­வதும் மிக உற்­சா­கத்தில் இருப்­பார்கள், இந்த ஆண்டு 142 சத­வீதம் மது விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது, இது கடந்த ஆண்டை விட 125 சத­வீதம் அதி­க­ரித்­துள்­ளது என புள்­ளியல் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இதற்­காக 2.3 பில்­லியன் தொகை செல­வி­டப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்­பனை அதி­க­ரித்­துள்­ளதால், குற்­றங்­களும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொலிஸார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.