காலி லபுதுவப் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொறியியல் பிரிவில்  கல்விகற்கும் மாணவி ஒருவரை கத்தியால் குத்திவிட்டு, அவரிடமிருந்து தொலைபேசியை பறித்துச்சென்ற சந்தேக நபர் ஒருவரை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் | Virakesari.lk

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 23 வயதுடைய தனமல்வில பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாணிவியின் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு சம்பவத்திற்காக பயன்படுத்திய கத்தியையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்த மாணவி தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

குறித்த மாணவியும் தனமல்வில பகுதியில் வசித்து வருபவர் என்பதோடு, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தில் பொறியியல் பிரிவில் கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கைதான சந்தேக நபரை இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.