ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு நேற்று திங்கட்கிழமையுடன் 12 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது.

இந்நிலையில், அதனை முன்னிட்டு பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட இன்றைய தினம் கொழும்பு முகத்துவாரம் காளி கோவிலுக்குச்சென்று மொட்டையடித்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.