மத்திய சுற்றாடல் அதிகாரசபையானது (CEA) ஜனவரி 28,29 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் 40 இடங்களில் இலத்திரனியல் கழிவுப்பொருட்கள் சேகரிப்பு திட்டத்தை நடத்தவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 17 இடங்களும், கம்பஹாவில் 13 இடங்களும், களுத்துறையில் 10 இடங்களும் இத்திட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரம் மற்றும் இலத்திரனியல் கழிவுகளால் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதுடன் சுற்றாடலலும் பாரியளவிலான அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளது.

இந் நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.